சைவம்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

ௐௐௐௐௐௐௐௐௐ
சிவ சிவ !
********************
முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் !
**************
பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா !
~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ?
முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார்
களே !
~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது நம் கடமை !
~ விளக்கம் செய்யுங்கள் ஐயா !
~ முப்புரி நூல் அந்தணர் , சத்திரியர் , வைசியர் ,சூத்திரர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது ! அது எல்லோருக்கும் தனி உரிமை !
~ சூத்திரர் என்பது இழிவான குலமா ஐயா ?
~ இவ்வளவு கற்றும் உனக்கு ஏன் இந்த ஐயப்பாடு ?
~ இல்லை , என ஓரளவு அறிவேன் ! ஐயா !
ஆயினும் தெளிய உணர்வதற்கும் , பிறர் அறிந்து தெளிந்து உணர்வதற்கும் , உணர்த்துங்கள் ஐயா !
~ இப் பெரும் பிரிவுகள் ,அவரவர் செய் தொழிலால் அமைந்தவை அல்லால் , சாதி குல ஏற்ற தாழ்வால் அல்ல !
~ விளக்கம் வேண்டும் ஐயா !
~ சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் எவர் உழைப்பால் உண்டு உடுத்து ,உறைந்து சுகித்து வாழ்கிறார்கள் ?
~ உணர்ந்தேன் ஐயா !
பிற குலத்தவர்கள் தான் தம் உடல் உழைப்பாலும் , அரிய செயல்களாலும் அவர்களைத் தாங்குகிறார்கள் !
~சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப் பட்டக் கடமைகள் என்ன ?
~ அகத் தூய்மை புறத் தூய்மைகளுடன் வாழ்ந்து ,வேத ,
ஆகமங்களை ஐயம் திரிபு அற ,அவர்கள் ஆச்சாரியார்களிடம் கற்று , சமய ,விசேட , நிர்வாண தீட்சைகள் ஏற்று ,நித்திய அக்னி வளர்த்து , சுவார்த்த பூசை எனப் படும் தனக்கு உரிய பூசைகள் இயற்றி , பின் ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பட்ட பிறகே , சிவாலயத்தில் கருவறையில் புகுந்து ,இறைவனை பூசை செய்யத் தகுதி உடையோராவர் !
~ சிவ சிவ !
~ அது மட்டுமல்ல ! ஒரு கன்னியை திருமணம் செய்த பிறகே பூசை செய்ய தகுதி பெறுவர் !
உடல் ஊனங்களும் ,தொடர் நோய் உடையோரும் , நல் ஒழுக்கங்கள் இல்லாதோரும் பூசிக்கத் தகுதி உடையோரல்ல !
~ திருமணம் இதர சுப ,அசுப காரியங்களும் இவர்கள் செய்யலாமா ?
~அவை அந்தணர்களுக்கு
*உள்ளேயே , சில உட்பிரிவினர்களுக்கே உரியவை !
~ சிவாச்சாரியார்கள் குலம் ,இறைவனாரின் ஐந்து முகங்களில் தோன்றிய முனிவர்கள் வழி வந்த மரபினர் என்பது சிவாகம முடிவு !
சிவத்தை மட்டுமே இறைவனாகக் கொண்ட கொள்கையால் அந்தணரினும் மேம்பட்டப் பெருமைகள் உடையோர் !
~ அவர்கள் இல்லற வருவாய்க்கு அரசு , தனியார் பணிகளுக்குச் செல்கிறார்களே ! ஐயா ?
~வகுக்கப் பட்ட நியதிகளை மீறுதல் ,சிவாச்சாரியார் என்ற குலப் பெருமைக்கு உகந்ததல்ல !
உடன் தகுதி இழப்பு ஏற்பட்டு விடும் !
~ போதும் ஐயா !*
அந்தணர்களின் குலப் பெருமைகளை அறிய அவா ஐயா !
அந்தணர்கள் வேதங்களில் வகுக்கப்பட்ட அறநெறிகளை வழுவாது கடைபிடித்துஏனைய குலத்தவருக்கெல்லாம் உதாரணமாக ,ஒரு தவ வாழ்க்கையை வாழக் கடமைப் பட்டோர் !
இவர்களுக்கு வகுக்கப் பட்ட வாழ்வியல் கடமைகள் என்ன ?
இறைவனார் அருளிச் செய்த நான்கு வேதங்களையும் ,ஐயம் திரிபு அறக் கற்க வேண்டும் !
அன்றாடம் முத்தீ வளர்த்து , சிவ பூசை இயற்றக் கடவர் !
~ வேதத்தின் ஞான பாத்த்தை ஆராய்ந்து வழிவழியாக வரும் வம்சத்தாருக்கு கற்பிக்கக் கடமை உடையோர் !
அவர்களில் சிலர் ஆச்சாரியர்களாக அவ் வினத்தவர்களுக்கு உரிய சுப , அசுப கடமைகளையும் , கரும காண்ட விதிப்படி ஆற்றுதற்கு உரியோர் ஆவர் !
ஞான பாதத்தை உணர்த்த ,அக் குலத்தவரில் தக்க ஆச்சாரியார்கள் இல்லா நிலை ஏற்படும் போது , பிற மூன்று குலத்தில் தோன்றிய வேத விற்பன்னர்களிடம் பயில அனுமதி உண்டு !
~ உதாரணம் வேண்டும் ஐயா ?
~ வேத வியாசர் யார் ?
~ பராசர முனிவர் வழி , சத்தியவதி என்ற
மீனவ குலப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பது வரலாறு !
~ மகா பாரதத்தை அருளியவர் யார் ?
~ வியாச மா முனிவர்! பராசர முனிவருக்கும் , சத்திய வதிக்கும் பிறந்தவர் !
இராமாயணத்தை யாத்த வான்மீகி முனிவர் யார் ?
~ சூத்திர குலத்தவர் என்பர் !
~18 புராணங்களையும் அருளிய சூத முனிவர் யார் ?
வியாச முனிவரின் சீடர் ! அவர் எக் குலத்தவர் ?
பிராமணருக்கும் , பிராமணல்லாருக்கும் பிறந்தவர் என்பதாலேயே , சூத முனிவர் எனப் படுவார் !
~ அவர் எவருக்கு 18 புராணங்களையும் போதித்தார் ?
~ நௌமி சாரண்ய பிராமண குலத்தவர் உள்ளிட்ட , முனிவர்கள் அவரை எதிர் கொண்டு ,வணங்கி வரவேற்று ,உபசரித்து ,உயர்ந்த ஆசனத்தில் இருத்தி ,தாங்கள் கீழே அமர்ந்து 18 புராணங்களையும் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க ,அவர் , தன் ஆச்சாரியார் வியாசர் , தனக்கு உணர்த்தியவாறு எடுத்து உரைத்தது வரலாறு !
இப்படியாகப் பல வரலாறுகள் உள்ளன ! விரிப்பின் பெருகும் !
~ இறைவனார் சாதி குலப் ஏற்ற இரக்க சிந்தனைகளை , திருமுறை சாத்திரங்களிலும் , திருமுறை , சாத்திர குரு சீடர் உறவு முறையிலும் வைத்து , எல்லா இனத்தவரும் சம நிலையினரே என உணர்த்தியதை உய்த்து உணர்க !
~ பிராமணர்கள் வேறு தொழில் செய்யக் கூடாதா ? ஐயா !
செய்யக் கூடாது !
அவ்வாறு பிற குலத்தவருக்கு வகுக்கப்பட்டத் தொழில்களைச் செய்யின் , நெறிகள் கெடும் ; உலகிற்கே கேடு சூழும் !
இன்றைய நிலை முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கிறதே ?ஐயா !
அதனால்தான் பஞ்ச பூதங்கள் தம் செயல்களில் வழுவுவதால் வாழ்வியல் கேடுகள் சூழ்ந்து விட்டன !*இதற்கு யாரைக் குறை கூறுவது ஐயா ?
அரசு ,சமுதாயம் இரண்டுமே
குற்றவாளிகள் !
என்ன செய்தால் தீரும் ?
~ எல்லையைத் தாண்டி விட்டது !
இருப்பினும் ஓரளவு முன்னோர் வகுத்த நெறிக்குத் திரும்ப முயலலாம் !
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !
~ சொல்லுங்கள் ஐயா !
~வேதாகம , தேவாரப் பாட சாலைகள் ஆங்காங்கே தொடங்க வேண்டும் !
சிவாச் சாரியார்களையும்*,
அந்தணர்களையும் ,
அனைத்து ஊர்களிலும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்த வேண்டும் !
யோக நிலையில் நின்று ,ஞான காரியங்களை நிறைவேற்ற வேண்டிய அவர்களுக்கு இல்லத் தேவைகளைப் பற்றிய எந்த சிந்தையும் இல்லா அளவுக்கு ,தேவையான செல்வ வளங்களை அளித்துக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் !
பயன் என்ன விளையும் !
வானம் சுரக்கும் !
பஞ்ச பூதங்களுக்கான அதி தேவர்களும் , வேதங்களும் , திருமுறைகளும்* *சிவாலய பூசைகளும்,
விழாக்களும் போற்றுதல் செய்யப் படுவது கண்டு ,மகிந்து ஆசி வழங்குவர் !
மக்கள் பூமியிலேயே
துன்பமிலா வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைவர் !
~முன் உதாரணம் ஐயா ?
~சிவாலயத் திருப் பணிகளுக்காக கோவை வசந்த குமார் ஐயா அவர்களுடன் பட்டி தொட்டிகளெல்லாம் 12 ~ஆண்டுகள் அலைந்தவன் நான் !
~அதில் நாங்கள் உணர்ந்தது சோழர்கள் ஆலயங்களை எடுத்து ஆகம விதிகளின்படி
முறைமயாகப் பராமரித்ததும், இறைவனாரே நாட்டை அவர்கள் மேலோங்கி நின்று ,சுவர்க்க போகங்களை மக்களுக்கும் ,அருளிய தூய வரலாற்று நிலைதான் !
இது நடக்கக் கூடிய காரியமா ?
~ ஏன் முடியாது ?
அரசு அற நிலையங்களின் நிர்வாகத்தை பொது மக்களிடையே விட்டு , கண்காணிப்பாளர் என்ற முறையில் காத்தால் போதும் !
அரசு நிதி உதவியே ,மேற் கண்டவாறு மீண்ட சுவர்க்கம் காண்பதற்குத் தேவையில்லை ! ஆனால் சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் ,வேத ,உப நிடத ,சிவாகம சாத்திரங்களின் பிழிவே ,சைவத் திருமுறைகளும் , சாத்திரங்களும் என அறிந்தும் , அவற்றைப் போற்றிக் கொண்டாடததும் , இன்றைய நாளில் அருட் செல்வத்தை அவர்கள் இழந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்து , இறைவனிடம் மன்னித்தருள வேண்டி இறைஞ்ச வேண்டும் !
அவைகளை உய்த்து உணர்ந்து , கற்று இறைவனாரைப் போற்றி பயன் பெற வேண்டும் !
ஐயா ! அந்தப் பூணூல் ?
~என்ன ஐயம் ? சாதி ஏற்ற தாழ்வுகளை இறைவனாரே உடைத்து எறிந்த வரலாறுகளைச் சொல்லியும் திருந்த மாட்டாயா ?
ஆதாரங்கள் கேட்பார்களே ஐயா ?*
* அதுவும் சரிதான் !*
*சிறுத் தொண்ட நாயனார் என்ன குலத்தவர் ?*
*~மாமாத்திரர் குலத்தவர் !*
*சூத்திர குலத்தவர் ; மருத்துவத் தொழிலினர் என்பது சிவக் கவி மணி ஐயா அவர்கள் முடிவு ;*
*வன்னிய குலத்தவர் என்பது தவத்திரு ஊரன் அடிகளார் முடிவு !*
*~ *இவர் முப்புரி நூல்*
*அணிந்திருந்த *வரலாறு* *சேக்கிழார் பெருமானால் குறிக்கப் பட்டுள்ளது !*
*சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ” முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் ” ~*
*மகிழ்ச்சி ஐயா !*
*ஆனாலும் ஆகமச் சான்று காட்டினால் ,எல்லா குலத்தவருமான அடியார்களும் , மேலும் , தெளிந்து , முப்புரி நூல் அணிவோம் ஐயா !*
*~ சரி ! மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் !*
*சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார் !*
*இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் , எல்லையில்லாப் பெருமைக்குரிய , யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் !*
*நூல் பெயர் ~சைவ சமய நெறி ~ உட் தலைப்பு ~ஆசாரியார் இலக்கணம் ~ பாடல் எண் -49 -ல் அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் !*
*பாடல் எண் ~50 =*
*~ மன்னர்க்கு மூன்று அருகமாம் வசியருக்கு இரண்டாம் அன்னியருக்கே ஏகம்* *அருகம் ~ ; அருகம் = பூணூல் /*
*மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் !*
*சூத்திரர்கள் தரித்தற்குரிய காலம்* *வரையறை செய்தல் .: ~*
*~பாடல் எண் : ~52 -*
*~ தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் இந் நூல் ~*
*தர்ப்பண காலத்திலும்* ,
*அர்ச்சனை செய்யும் போதும் , அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் தரிக்கக் கடவர் !*
*ஆகவே இவர்கள் பூசை செய்வதற்கும் , வேள்வி செய்வதற்கும் உரியர் என அறிக !*
*சூத்திரர்களுள் எக் காலத்திலும் ,பூணூல் தரிக்க உரிமை உடையோர் : ~~*
*~பாடல் எண் 53 ~*
*~இவருள் நைட்டிகன் எப்போதும் தரிக்க /* *அவனியிலும் ஆசை அறுத்தால் ~*
*சூத்திரருள் நைட்டிக பிரமாச்சாரியானவன்* , *மண்ணாசை* ,
*பொன்னாசை* ,
*பெண்ணாசை , ஆகிய மூவகை* *ஆசைகளையும் நீக்கி*
*இருப்பானாகில் எக் காலத்தும் தரிக்கக் கடவன்*.
*ஆக ,ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும் , முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த ,ஆகம நூல் அனுமதித்துள்ளது காண்க !*
*53 -ஆம் பாடலில் வகுத்த விதி , ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக !*
*சிறுத் தொண்டர் இல்லறத்தவர் !*
*அவர் முப்புரி நூலணிந்தவர் !*
*ஆகவே , நம் பெருமான் அணியும் முப்புரி நூல் அடியார்களாகிய நாம் எக் குலத்தவராயினும் அணிய உரிமை உடையோம் எனத் தெளிக !*
*ஐயா !*
*குல ஏற்ற தாழ்வு இல்லை எனத் தெளிந்தோம் !* *ஆயினும் மேலும் சில உதாரணங்கள் வேண்டும் !*
*சாதி குல ,ஏற்ற தாழ்வு பார்க்கின்றவர்களுக்கு , சிவத்தின் முன் நிற்கத் தகுதி இல்லை என உணர்த்துவதே பெரிய புராணம் !*
*01 ~ மானக்கஞ்சாறர் புராணம் பாடல் எண் 01 ~ ” நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப் பதி மாறனார் ! ~'”*
*02 ~ ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாயனார் ~பாடல் – 02 ~*
*~03 ~மூர்த்தி நாயனார் / ” அப் பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மைச் / செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார் ” ~பாடல் 08 ~*
*~04 ~ திரு நாவுக் கரசு நாயனார் ~*
” *அனைத்து வித / நலத்தின் கண் வழுவாத நடை முறையில் குடி நாப் பண் / விலக்கில் மனை* *ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் / குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் ~* *பாடல் 15* ~*
*~05 ~ ” மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார் ” ~ சிறுத் தொண்ட நாயனார் புராணம் . பாடல் ~02 ~*
*06 ~ ” தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலம் / நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் ~ வாயிலார் நாயனார் புராணம் பாடல் 10~*
*இவை போதுமா ?*
*அந்தணராகிய *அப்பூதி *அடிகள் ,வேளாண் *குடியினரான* ,
*நாவுக்கரசர் பெருமான் திருவடியில் வீழ்ந்து* *வணங்கியதும் ,ஆதி சைவர் ஆகிய நம்பி ஆரூரர் , ஏயர் கோனார் திருவடியில் வீழ்ந்து வணங்கியமையும் நினைவில் கொள்க !*
*ஆக , சைவர்களுக்குள் குல ஏற்ற தாழ்ச்சியே இல்லை என்பது பெருமானே வகுத்த விதி என்பதையும் , முப்புரி நூல் எக்குல சைவருக்கும் உரியது எனவும் அறிக !*
*அடியார்கள் , திரு நீறு உருத்திராக்கத்துடன் முப்புரி நூலும் அணியாகக் கொள்க
இடுகையிட்டது SIVAM நேரம் 9:39 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சைவ சமயம் அடிப்படை நுட்பம்

சைவ சமயம் அடிப்படை நுட்பம்


1. அடிப்படை நுட்பம்       2. சைவநெறி நூல்கள்
3. சைவ சின்னங்கள்       4. சமயக் குரவர்கள்
5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்
1. அடிப்படை நுட்பம்
இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.
நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.

நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்
இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.


சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள்



சைவ சமயம் அடிப்படை நுட்பம்

சைவ சமயம் அடிப்படை நுட்பம் 4.9/5 (10)

சைவ சமயம் – அடிப்படை நுட்பம்
1. அடிப்படை நுட்பம்       2. சைவநெறி நூல்கள்
3. சைவ சின்னங்கள்       4. சமயக் குரவர்கள்
5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்
1. அடிப்படை நுட்பம்
இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.
நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.
நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்
இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.
சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.
உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.
2. சைவநெறி நூல்கள்
வேதங்களும், சிவாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மையைப் பறைசாற்றுவன. வேதங்கள் நான்கு: ரிக், யசூர், சாமம், அதர்வனம். வேதங்கள் உலகிற்கு பொதுவான அறங்களைச் சொல்வது. இது அருநெறிய மறை எனப்படும். சைவத்திற்கு சிறப்பு சேர்ப்பது சிவ ஆகமங்கள். இவை மொத்தம் 28. சிவ ஆகமம் சத்திநிபாதத்திற்குரிய நுட்பத்தைச் சொல்வது. இது பெருநெறி எனப்படும். இவை வடமொழியில் உள்ளன. இவற்றின் கருத்துக்களையும் சைவ சித்தாந்தத்தையும் தமிழில் பல்வேறு நூல்கள் தாங்கியுள்ளன. தமிழின் தோத்திர நூல்களாக பன்னிரு திருமுறைகளும், சாத்திர நூல்களாக 14 நூல்களும் உள்ளன. திருக்கோவில்களிலும், வீட்டிலும் திருமுறை பதிகங்களை தினமும் ஓத வேண்டும். இவை நமக்கு நன்மையை பெருக்கி, அல்லவற்றை விலகச் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமுறையே வாழ்வின் நெறிமுறை. திருமுறை அறிவோம். குழந்தைகளுக்கு திருமுறை பாடல்களும், சைவ சமய நெறியை அறிவிப்பதும் பெற்றோர்களின் மிக முக்கியமான கடமை. நம் நூல்கள் யாவும் காலத்தை வென்றவை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும், என்றும் ஒரு சிறு எழுத்து பிறழாமல் உண்மை உரைப்பவை. உலகில் வேறு எதற்கும் இந்த அருள் கிடையாது. இது இறைவனின் அருளால் மட்டும் கூடும்.
3. சைவ சின்னங்கள்
திருநீறும், உருத்திராக்கமும், பஞ்சாக்கர மந்திரமும் (நமசிவாய, சிவாயநம, சிவசிவ மந்திரம்) முக்கியமான சைவ சமய சின்னமாகும். தீமைகளினின்றும் நம்மை பாதுகாத்து இறைவனின் பெரும் கருணையை நினைவூட்டும் சின்னங்கள் இவை. குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். வெண்மை நிறத் திருநீறே அணியத்தக்கது. சமய தீட்சை பெற்றோர் மாத்திரமே திருநீற்றை நீரில் கரைத்து திரிபுண்டரமாக அணியும் தகுதியுடையோர். மற்றோர் நீரில் கலவாது பொடியாக அணிதல் வேண்டும். திருநீற்றை மூன்று கோடுகளாக, இரண்டு கடைப்புருவ எல்லை வரை அணிய வேண்டும். ஒவ்வொரு கோட்டிற்கும் இடையே ஒவ்வொரு அங்குல இடைவெளி வேண்டும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கும் என்ற குறிப்பு தோன்ற தரிப்பதே, மூன்று கோடுகளினால் திருநீறு அணிவதாகும். தலை, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 இடங்களில் அணியலாம். திருநீற்றை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தரித்தல் வேண்டும். தரிக்கும் போது, சிவபெருமானை சிந்தையில் வைத்து திருநீறு நிலத்தில் சிந்தாத வண்ணம் நெற்றியை மேலே தூக்கி “சிவசிவ”, “நமசிவாய” என்ற பஞ்சாக்கர மந்திரத்தை ஓதி அணிய வேண்டும். தூங்கி எழுந்த உடனும், தூங்குவதற்கு முன்னும், நீராடியவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், கடமைகளைச் செய்யும் போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிய வேண்டும். திருநீற்றை பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ மட்டும் வைக்க வேண்டும். குரு, சிவனடியார் திருநீறு கொடுத்தால், அவர்களை வணங்கி, அடக்கத்துடன் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். திருநீற்றுக்கு மேலே குங்குமமேனும், சந்தனமேனும் அணியலாகாது. திருநீற்றுக்குக் கீழே, புருவ மத்தியில் குங்குமம் தரிக்கலாம். திருநீற்றை ஊதுவதோ, கோவில் தூண்களிலோ, வேறு இடங்களில் கொட்டுவதோ, கீழே சிந்துவதோ, கூடவே கூடாது.
உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்து அசுரர்களாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களை தேவர்கள் சிவபெருமானிடம் எடுத்துரைத்த போது, சிவபிரானது மூன்று கண்களில் இருந்தும் சிந்திய மணியே உருத்திராக்கமாகும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எத்தனை முக்கியமோ, அது போல சைவர்களுக்கு உருத்திராக்கம் அணிவது மிக முக்கியம். முறையாக உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடு வாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறு உலகில் இறைவன் திருவடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர். உருத்திராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். தூங்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை, ஒரே ஒரு மணியாக, சிவப்பு கயிற்றில் கட்டி, கழுத்தில் தெரியும் படியாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும். கழற்றவே கூடாது. பெண்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்கலாம். நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன்-மனைவி தாம்பத்ய நேரங்களிலும் கண்டிப்பாக அணியலாம். சிறுவர் சிறுமியர் அணியும் போது அவர்களின் படிப்புத்திறன் மேலோங்கும். பெண்கள் அணிந்திருக்கும் போது, தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாச்சமும் நிறைந்திருக்கும். ஆகையால், எல்லோரும் கண்டிப்பாக உருத்திராக்கம் அணிய வேண்டும். உருத்திராக்கம் அணிந்தால் தான் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். மருந்துக்குப் பத்தியம் எவ்வளவு அவசியமோ அது போல, உருத்திராக்கம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு பன்றி மாமிசத்தை எப்போதும் சாப்பிடக்கூடாது.) உருத்திராக்க மாலையாக அணியும் போது, சந்தியாவந்தனம், சிவபூசை, செபம், தேவார திருவாசக பாராயணம், புராண படனம், சிவாலய தரிசனம் போன்ற நேரங்களில் மட்டும் தரிக்க வேண்டும். இது இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பொருந்தும்.
சைவர்கள், நமசிவாய, சிவசிவ, சிவாயநம ஆகிய பஞ்சாக்கர மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.
4. சமய குரவர்கள், சந்தான குரவர்கள்
7 ஆம் நூற்றாண்டில் சமண பௌத்த சமயங்கள் அரசர்களின் துணையோடு பரவிய போது, சைவ சமயத்தை இறைவன் திருவருளால் நிலை நிறுத்தியவர்களில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருவாசகம், திருக்கோவையார் பாடிய மாணிக்கவாசகர் நால்வர்களே சமயக் குரவர் (குரு) எனப்படுவர். 3 வயதிலே சிவபெருமானின் திருவருளால் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டு சிவஞானம் பெற்று பல அற்புதங்கள் செய்து 16 வயது வரை வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டியவர் திருஞானசம்பந்தர். சமண சமயத்தில் உழன்று, இறைவன் திருவருளால் சைவ சமயம் தழுவி, தேவாரம் பாடி 81 வயது வரை வாழ்ந்து முக்தியடைந்தவர் திருநாவுக்கரசர். இறைவனின் திருவுருவமே சுந்தரராக அவதரிக்கப் பெற்று 18 வயது வரை வாழ்ந்து பல்வேறு செயற்கரிய அற்புதங்களை செய்தவர் சுந்தரர். பாண்டிய நாட்டிலே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திருவாசகம், திருக்கோவையார் பாடி தேனமுதத்தைத் தந்து 32 வயது வாழ்ந்தவர் மாணிக்கவாசகர். பின்னர் வந்த சந்தான குரவர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியவர்கள் நமக்கு சைவ சாத்திர நூல்களை அருளிய குருமார்கள். 63 நாயன்மார்களும் செயற்கரிய சிவதொண்டு புரிந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும் குருமார்கள். இவர்களின் வரலாற்றை முழுவதுமாக படித்து, கேட்டு அறிந்து நம குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.
5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்
சைவத்தின் சிவஞானம் கடலை விட ஆழமானது. பின்வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள். வாழ்வு நல்திசையில் செல்லும். திருக்கோவிலின் கருவறை ஏன் இருட்டாக உள்ளது? சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் கை தட்டலாமா ? சிவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் ? கோவிலில் செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதவை எவை? சமய சந்தான குரவர்களின் வாழ்கை வரலாறு என்ன? பாடல் பெற்ற தலங்கள் 274, அவற்றின் தலவராறும் எவை? சிவபெருமானின் அட்டவீரட்ட செயல்களும் தலங்களும் எவை? உழவாரப்பணி ஏன் அனைவரும் செய்ய வேண்டும்? 63 நாயன்மார்கள் செய்த சிவ தொண்டுகள் எவை? மலபரிபாகம் என்றால் என்ன? தெய்வச் சேக்கிழார் பிறந்த ஊர் எது? அசபா நடனம் என்றால் என்ன? மாடக் கோவில் என்றால் என்ன? பஞ்சமம், புறநீர்மை என்றால் என்ன? வீரபத்திரர் யார்? பஞ்சகவ்யம், கேட்டுமுட்டு என்றால் என்ன? தீக்ஷை யார் பெறலாம்? குளத்து நீரை ஊற்றி விளக்கு எரித்த நாயன்மார் யார் ? திருமால் தவமிருந்து, சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற திருத்தலம் எது ?
உங்கள் ஆன்மீக சைவ பயணத்தை இன்றே துவங்குங்கள். வாழ்வில் எல்லையில்லாத பேரின்பம் பெற்றிடுங்கள்.
இடுகையிட்டது SIVAM நேரம் 9:27 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 15 பிப்ரவரி, 2014

திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு

திருமூலர் வலியுறுத்தும் வழிபாடு

பக்தி நெறியைத் தமிழ் உலகிற்கு வழங்கிய சித்தர் பரம்பரையில் முதன்மையும், தொன்மையும், வாய்ந்தவர் திருமூலர்.'சித்தாந்தத்தின் தந்தை' எனப் போற்றத்தக்கவர். முதன்முதலில் 'சித்தாந்தம்' என்ற சொல்லைத் தமது திருமந்திரத்தில் எடுத்தாண்டவரும் இவரே. இவரால் பாடப்பட்ட திருமந்திரப் பாடல்கள் பத்தாம் திருமுறையாகத் திகழ்கின்றன. இப்பத்தாம் திருமுறையில் இறைவழிபாடு பற்றிய செய்திகள் அதிகமாகக் காணக்கிடக்கின்றன.

சைவ சமயம் குறிப்பிடும் சரியை, கிரியை, ஞானம், யோகம் எனும் நால்வகை நெறிகளையும் சுட்டும் திருமூலர், இறைவழிபாட்டில். புறவழிபாட்டு நெறிகளைவிட அகவழிபாட்டு நெறிகளையே மேன்மையுடையதாக வலியுறுத்துகிறார். இன்றைய காலச்சூழலில் அகவழிபாடு எந்த அளவிற்குச் சமுதாயத்திற்குப் பயன்படுகிறது என மதிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வழிபாடு விளக்கம்:

மனத்தை இறைவனிடம் வழிப்படுத்துவது வழிபாடாகும். வழிபாடு என்பது ஒரு சடங்கு. இது உயிர்ப்புள்ள முயற்சி. அறிவார்ந்த ஆள்வினை. மனிதன் எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சி மூலம் ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்ளத் துணை செய்வது வழிபாடு. குறைபாடுள்ள உயிர்கள் உயர்ந்த தன்மை அடைய முயல்வதற்கு வழிபாடு இன்றியமையாதது. உயிர்கள் தன்னிச்சையான போக்குகளை நிறுத்தி, நன்னெறியில் மனதைச் செலுத்துதலே வழிபாட்டின் அடிப்படை.

வழிபாட்டின் வகைள்:

வழிபாடு தனிவழிபாடு, கூட்டுவழிபாடு என இரண்டு வகைப்படும். வழிபடுவோர் தன் நன்மை கருதித் தான் மட்டும் வழிபட்டால் அது தனிவழிபாடு, கூட்டுவழிபாடு பலரும் கூடி பொது நன்மைக்கு வழிபடுவது; இசுலாமியர், கிறித்துவரின் கூட்டுவழிபாடு போன்றது. தனியயாரு மனிதன் தன் உள்ளத்தில் தன் ஆன்ம நாயகரான இறைவனை வைத்து வழிபாடு செய்வது அகவழிபாடு ஆகும். இதனை ஆன்மார்த்தம் என்று வழங்குவர். தன் நலம் கருதியோ, பிறர் நலம் கருதியோ, திருக்கோயில் அமைத்து இறைவனை நீராட்டிப் பூச்சொரிந்து வழிபடுவது புறவழிபாடு அல்லது பரார்த்த பூசையாம்.

திருமூலர் காட்டும் வழிபாட்டு நெறிகள்:

திருமூலர் சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு, சிவனை அன்பின் வடிவமாக வழிபட்டவர். திருமூலர் சிவனை வழிபட, ஆகமங்கள் குறிப்பிடும் நால்வகை நெறிகளையும் சுட்டுகிறார். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். நாடும், நகரமும் தேடித் திரிந்து சிவபெருமானைப் பாடுதலும், ஆலய வழிபாடு நிகழ்த்துதலும் சரியை நெறியின்பாற்படும். மலரிட்டு வணங்கி இறைவனை அகத்தும், புறத்தும் வைத்துப் பூசித்தல் கிரியை நெறியாகும். சாதகர் உடல் நினைவின்றி இறைவனோடு ஒன்றியிருப்பது யோகமாகும். ஞானம் என்பது சிவனை அறியும் அறிவு, சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் ஞானத்தை அடைவிக்கும் நெறியாகும். இந்நான்கு நெறிகளில் கிரியை நெறியில் உள்ள அகவழிபாட்டினையே சிறப்பாகவும், உயர்வாகவும் வலியுறுத்துவர்.

கிரியை நெறி:

கிரியை என்பது பூசை. பூசை என்பது பூக்கொண்டு செய்தல் என்று பொருள்படும். இப்பூசை ஆன்மார்த்தம், பரார்த்தம் என இருவகைப்படும். இதில் ஆன்மார்த்த பூசையின் சிறப்பினை உயர்வினைத் திருமூலர் வலியுறுத்துவதன் மூலம், இன்றைய நிலையில் புறவழிபாட்டின் வழி எழும் பலவித சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அகவழிபாடு அமைகிறது.

திருமூலரும், அகவழிபாடும்:

திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். சிவபெருமான் ஆன்மாக்கள் தோறும் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் உள்ளமாகிய மனமண்டலமாகும். அவ்வுள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதனை,

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'

(திருமந்திரம். 1823)

என்ற பாடல் காட்டுகிறது. திருமூலர் உடலினை நடமாடும் கோயிலாக உருவகிக்கிறார் (திரு.ம.1857). சைவ சமயத்தில் பூசலார் நாயனாரும் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்தார். ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்,

'வையந் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை

இடராழி நீங்குவவே என்று'

என்றும், பூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில்,

'அன்பே தகளியா யார்வமே நெய்யாக

அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி

ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்றும் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. பிற்காலத்தில் தோன்றிய சிவவாக்கியார் எனும் சித்தர்,

'கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே'

(திருமந்திரம். 1823)

என்று தம் பாடலால் அகவழிபாட்டினை வலியுறுத்துகிறார். திருமூலர் தமது திருமந்திரத்தில் சுமார் 59 பாடல்களில் உடலை அல்லது உள்ளத்தைக் கோயிலாகக் குறித்து பாடியதாகத் தெரிகிறது.

திருமூலர், மனத்தையே கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்குக் காலையிலும், மாலையிலும் பாடும் பாட்டே நிவேதனப் பொருட்களாகும் என்று குறிப்பிடுகிறார் (திரு.ம.1824). மனத்துள்ளே விளங்கும் இறைவனை வழிபட மலரையும் நீரையும் அடுத்துக் கூறுகிறார். புறத்தேயுள்ள பெருமானை வழிபட நீரும், மலரும் இன்றியமையாதன. அதுபோல அகத்தேயுள்ள பெருமானை வழிபடக் கண்களையே மலராகவும், அதில் கசிந்துவரும் கண்ணீரையே நீராகவும் கொண்டு அபிடேகம் செய்து வழிபடுதலே சிறந்த வழிபாடு (திரு.ம.1826) எனக் குறிப்பிடுகிறார். இதனை,

'நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கலைகழல் ஈசசைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக்காண்குற வல்லால்

பனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே'

(திருமந்திரம். 1826)

என்ற பாடல் காட்டுகிறது. இவ்வாறு மலரையும், நீரையும் உணர்ந்து சிவனுக்கு வழங்குபவர்களே புண்ணியம் செய்தவர்கள். இவ்வுண்மையை அறியாது உலகத்தார் கெடுகின்றனரே (திரு.ம.1828) என்று வருந்துகிறார்.

திருமூலர், திருக்கோயிலில் பூசைகள் செய்தல் நூறுமடங்கு உயர்ந்தது. ஆனால் தவம் செய்வாரின் உடலில் (உள்ளத்தில்) செய்யப்படும் சிவபூசை ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும் (திரு.ம.1851) எனப் புறவழிபாட்டை விட அகவழிபாடு சிறந்தது என்று அகவழிபாட்டின் மேன்மையை விளக்குகிறார்.

இன்றைய சூழலில் அகவழிபாட்டின் தேவை:

இன்று தமிழ்நாட்டில் கோயில்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் அக்கோயில் களினால் பல்வேறு சமயப் பூசல்களும், சமுதாய மோதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று கோயில் நிலங்கள் பல நிலக்கிழார்களின் கைகளில் உள்ளன. மேலும் கோயில்களினால் வரும் வருமானம் முறையாக அரசிற்குக் கிட்டுவதில்லை. அவை நிருவாகத்தாரினரால் கையகப் படுத்தப்படுகிறது. கோயில் களுக்குச் செல்லும் பக்தர்களினால் கோயில் சுகாதாரச் சீர்கேட்டினை அடைகின்றது. திருக்கோயில்களில் விழாக் காலங்களில், திருவிழா என்ற பெயரில் மின்சாரம், தண்ணீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் திருக்கோயில் வழிபாடு அமைகிறது. திருக்கோயில்களுக்கு'வேண்டுதல்' என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் வழிபாடு செய்தல், பாதயாத்திரை, பஜனை (பக்திப்பாடல்கள்) செய்தல், ஊர்வலம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அமைதியின்மை, போக்குவரத்து நெரிசல், விபத்து போன்ற துன்பங்கள் நிகழ்கின்றன. இன்றைய சூழலில் மக்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நோன்பு நோற்றல், பாதயாத்திரை, ஊர்வலம் செல்லுதல் போன்ற செயல்களால் சமயப் பூசல்களும், சமுதாயச் சிக்கல்களும் ஏற்படப் புறவழிபாடு வழிவகுக்கிறது. வழிபாட்டு நெறிமுறைகளில் படையல்முறை (நிவேதனம்) குறிப்பிடத் தகுந்ததாகும். இன்று சிறுதெய்வ வழிபாட்டில் ஆடு, கோழி போன்ற உயிரினங்களை, பலியிடல் என்ற சூழ்நிலை ஏற்பட புறவழிபாடுகள் வழி வகுக்கின்றன.

தமிழர் வழிபாட்டில் உயிர்ப்பலிகளைக் கொடுத்து வேள்வி செய்வதைத் தமிழ்ச் சமயங்கள் வன்மையாகக் கண்டித்தன. வேள்வி புரிதலை வெறுத்து ஒதுக்கி வந்த தமிழர் நாகரீகத்தில் வேள்வி செய்யும் வழக்கமும், சடங்குகளும் மெல்ல வந்து புகுந்து கொண்டன. வேள்வி செய்தல் தமிழர்நெறி அன்று. திருமூலர் உயிர்ப்பலியைச் சாடுகிறார். வள்ளுவரும் வேள்வி செய்தலை,

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்சொகுந்து உண்ணாமை நன்று

(திருக்குறள். 259)

என வன்மையாகச் சாடுகிறார்.

இன்றைய சூழலில் வழிபாடு என்ற பெயரில், சமயப் பூசல்கள், மோதல்கள் ஏற்பட புறவழிபாடாகிய திருக்கோயில் வழிபாடு காரணமாக அமைகிறது. இந்நிலையில் திருமூலர் வலியுறுத்தும் அகவழிபாட்டினை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால் சாதி, சமயமற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இடுகையிட்டது SIVAM நேரம் 3:17 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

இடுகையிட்டது SIVAM நேரம் 9:16 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

பெரியபுராணம் – சில சிந்தனைகள்

சைவத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே,அல்லாது வேறு நிலையுளதோ?’ என்றருளிச் செய்தார்.

அடியாரோடு இருந்தால் தான் பூசையில் நேசம் வரும். பூசையினால் ஞானம் உண்டாகும். எனவே சங்கம வழிபாடாகிய அடியார் கூட்டுறவே ஞானத்திற்கு ஆதாரம்.

மணிவாசகரும் ‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்றே அருளிச் செய்தார்.

இவ்வழியே வந்த சேக்கிழாரும் அடியார்களின் வரலாற்றினை கூறுவதற்கு மிக ஆசையுடையவராக தன்னைக் காண்பிக்கிறார்.


பெரியபுராண அவையடக்கத்தில்,

அளவிலாத பெருமையர் ஆகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவுகூட உரைப்பரிது ஆயினும்
அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்


என்றே அருளிச் செய்கிறார்.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் உள்ள புராணங்களில் வரலாற்றினை நாம் எதிர்பார்க்க இயலாது. ஆனால் பெரியபுராணம் முழுக்க முழுக்க வரலாற்றினையே அடிப்படையாகக் கொண்டது.

பிற புராணங்கள் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தவர்களைப் பற்றிக் கூறும். ஆனால் பெரியபுராணம் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்றவர்களைப் பற்றிக் கூறுகிறது.

புலவரை ஆற்றுப்படுத்துவது புலவராற்றுப்படை. முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது முருகாற்றுப்படை. அதுபோல இறைவனிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்துவது பெரியபுராணம்.

சேக்கிழார் வரலாற்று உணர்வு மிக்கவர். சோழப்பேரரசின் முதலமைச்சரல்லவா அவர்..!

காப்பியம் செய்பவர்கள் அதில் தம் கற்பனையைக் கலக்கலாம். கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் மூலம் தம் கருத்தை கூறலாம்.

ஆனால் தாமியற்றிய பெரியபுராணத்தில் இம்மியளவு கூட கற்பனையை புகுத்தவில்லை, தெய்வச் சேக்கிழார் சுவாமிகள். அங்ஙனம் கற்பனைக் கதாபாத்திரங்களை அவர் படைத்துக் கொண்டாலும் பாதகமில்லை. ஆனாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. வரலாற்று உணர்வோடுதான் இயற்றியுள்ளார். இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம்.

ஞானசம்பந்தர் சிவனருள் பெற்ற வயதினைக் கூறுகிறார்.

”சிரபுரத்துச் சிறுவருக்கு மூவாண்டில் உலகுய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்” என்பது அவர் வாக்கு.

ஞானம் பெற்றவரை அவர் தந்தையார் தம் தோளின் மேல் வைத்துக் கொண்டு சென்றார் என்பதனை, “தாதையார் சிவபாத இருதயர்தாம் தெய்வ ஞானக் கன்றினை முன் புக்கெடுத்து பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல” என்பார் சேக்கிழார். இதிலிருந்தே நாம் ஞானசம்பந்தரின் வயதினை கணித்துவிடலாம்.

திருக்கோலக்கா தரிசனத்தின் போது ஞானசம்பந்தர் நடந்து வந்தார், அதைக் கண்ட சிவபாத இருதயர் ‘குழந்தை பாதம் நோகுமே?’ என்று தம் தோளின் மேல் வைத்துக் கொண்டார் என்று

“செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்துடன் நடந்து செல்லும்போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தம் தோளின்மிசை எழுந்தருளி”

என்று கூறுகிறார் சேக்கிழார்.

தந்தையின் பியலின் (பிடரி/தோள்) மீதிருந்து ஞானசம்பந்தர் பாடிய காந்தாரப் பண் ‘பியந்தைக் காந்தாரம்’ என்பர்.

ஆக, பிள்ளையார் ஞானம் பெற்ற வயதினை மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார்.

இங்ஙனம் வயதைச் சொல்லியவர் சம்பந்தரின் இயற்பெயரைச் சொல்லவில்லை. அவர் மனைவியின் பெயரைச் சொல்லவில்லை. ‘நம்பாண்டார் நம்பி பெறும் காதலி’ என்றுதான் கூறுகிறார்.

தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரருக்கு நடக்க இருந்த முதல் திருமணத்தில் மணமகள் பெயரை ‘சடங்கவி பேதை’ என்றே குறிப்பிடுகிறார்.
இதை ஆய்வாளர்கள் காப்பிய உத்தி என்கிறார்கள். ஆனால் தனக்கு நன்றாக உறுதியாகத் தெரிந்த விஷயம் பற்றி மட்டுமே சேக்கிழார் தெளிவாகக் கூறுகிறார். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததை அப்படியே கூறிவிடுகிறார். தம் கற்பனையை அங்கே புகுத்த முற்படவில்லை.

அதேபோல மங்கையரக்கரசியாரின் தந்தை ‘மணிமுடிச் சோழன்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஞானசம்பந்தரின் ‘மங்கையர்க்கரசி’ பதிகத்தில் ’மன்னெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்’ என்று வருவதை ஆதாரமாய் அவர்கள் கொள்கிறார்கள்.

ஆனால் சேக்கிழார் மங்கையர்க்கரசியாரைப் பற்றிக் கூறும்போது அவர் தந்தையார் பெயரைக் குறிப்பிடவில்லை.

சரியான வரலாற்றுக் குறிப்புடன் தெளிவாக பெரியபுராணம் இருக்கவேண்டும் என்று அவர் மனதில் உறுதியுடன் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தனக்குத் தெரியாதவற்றை அவர் கற்பனையாகவேனும் கூறுவதில்லை.

எனவே அவர் கூறுவதெல்லாம் வரலாறுதான் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் காலச் சமூகத்தில் லஞ்சம் இருந்தது என்பதை சேக்கிழார் நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார் என்பார் அறிஞர் மா.இராசமாணிக்கனார்.

அப்பரடிகள் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டார் என்பதறிந்த சமணர்கள் அவரைப் பற்றி அரசனிடம் திரித்துக் கூறுகின்றனர். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மன்னவனும்

“அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைநோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள்கொண்டு விடாது என்பால் கொடுவாரும் எனப்புகன்றான்”

என்று கூறுவதாக சேக்கிழார் காட்டுகிறார்.

இப்பாடலில் ஈற்றடியில் வரும் ‘பொருள் கொண்டு விடாது என்பால் கொடுவாரும் ‘ என்னும் அடி அப்பரடிகள் கால சமூகத்தில் புரையோடிப் போயிருந்த லஞ்சத்தைக் காட்டுகிறது.

இதற்கு உறுதி சேர்ப்பதாக ஒரு செய்தி மத்தவிலாசப் பிரகசனத்தில் உள்ளது.

காபாலினி சொல்கிறாள்: “ பௌத்த துறவிகள் ஒழுக்கம் உடையவர்களாக இல்லை. இவர்கள் மீது வழக்கு போட்டால் பொன் பொருள்களை நீதிபதிக்கு அள்ளிக் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி விடுவர்”

இதுவே சேக்கிழாரின் கூற்றுக்குத் தக்க ஆதாரமாய் அமைகிறது. சமுதாயத்தின் இழிநிலையைக் கூட பதிவு செய்துள்ளார் சேக்கிழார்.

ராஜராஜன் தான் கட்டிய பெரிய கோயிலில் நாயன்மார் திருமேனிகளைச் செய்து அத்திருமேனிகளின் கீழேயே அவ்வந்நாயன்மார் திருப்பெயரைப் பொறித்துள்ளான். அதில் மெய்ப்பொருள் நாயனார் திருமேனி பீடத்தில் ‘தத்தா நமரே காண் என்ற மிலாடுடையார்’ என்று குறிப்பிடுகிறான்.

இதன் மூலம் நாயன்மார் வரலாறு பெரியபுராணம் தோன்றுவதற்கு முன்னமே மக்களிடம் வழக்கில் இருந்தது என்பதை நாம் உணரலாம்.

’தத்தா நமரே காண்’ என்ற வார்த்தை சேக்கிழாரைக் கவர்ந்துள்ளது. அதனை,

“மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் ’தத்தா! நமர்” எனத் தடுத்து வீழ்ந்தார்”

என்று வைக்கின்றார் சேக்கிழார்.

அதேபோல பரஞ்சோதியார் புலிகேசியை வென்று கொணர்ந்த பொருட்களை,

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே
இகலரசன் முன் கொணர்ந்தார்”

என்று பட்டியலிடும் சேக்கிழார், வாதாபியிலிருந்து கணபதியைக் கொண்டு வந்ததாகக் கூறவில்லை.

பரஞ்சோதியார் காலத்திற்கு முன்பே கணபதி வழிபாடு தமிழகத்தில் தொடங்கியிருக்கக் கூடும். அதனை நம் ஆசார்யர்களும் ஏற்றுக் கொண்டு பாடியுள்ளனர். அவர்கள் காலத்திற்குப் பின்பு அவ்வழிபாடு இங்கு நிலை கொண்டுவிட்டது.

சேக்கிழார் பல இடங்களில் அடியார்களின் சாதியைச் சுட்டுகிறார். ஏன்..? ஈசன் அடியார் எவராயினும் அவரிடையே சாதிபேதம் இல்லை என்பதை வலியுறுத்தவே அவ்விதம் சுட்டிக்காட்டுகிறார்.

இளையான்குடி மாறனார் புராணத்தில் இளையான்குடி எங்கிருக்கிறது என்று கூறவில்லை.

மாறனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் காட்சியளித்ததைக் கூறும்போது,

“மாலயற்கு அரிய நாதன் வடிவொரு சோதியாகச்
சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி”

என்பார்.

இங்கே அம்மையை ‘ஏலவார் குழலாள்’ என்று சுட்டுகிறார். இது கொண்டு அந்த இளையான்குடி தொண்டை மண்டலத்தில் இருக்கலாம் எனும் எண்ணம் எழுகிறது. ஆய்வாளர்கள் இதுவரை அப்படிச் சொல்லவில்லை. எனினும் இது குறித்து ஆய்வு செய்யலாம்.

ஏன் அவ்விதம் அம்மையை ‘ஏலவார் குழலாள்’ என்றார்?

மாறனாரின் மனைவியார் தம் கணவர் தந்த விதை நெல்லையும் கீரையையும் விதவிதமாக சமைத்தார் என்பதை,

”மனைவியார் கொழுநர் தந்த மனமகிழ் கறிகள் ஆய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக்
கைம்மை
வினையினால் வேறு வேறு கறியமுதாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து
நின்று”

என்பார்.

அப்படி சமைத்து தயாராக்கிய போது அம்மையார், தம் கணவர் முன்பு பெரும் செல்வராக இருந்த போது அடியார்களுக்கு ‘உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா, அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய’ அளித்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து மனம் நொந்தார் என்பதனை, ‘பண்டை நினைவினால் குறையை நொந்து’ என்று குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

காஞ்சியில் அம்மை இறைவன் அளித்த இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்தாள் எனத் தலபுராணம் கூறும்.

”அம்மை உலகம் யாவைக்கும் இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்து உணவு அளிக்கும் போது நீர் ஏன் பிச்சை எடுக்கிறீர்?” என்று சுந்தரரும் தம்முடைய ஓணகாந்தன் தளி திருப்பதிகத்தில் “காரிரும் பொழில் கச்சிமூதூர் காமக் கோட்டம் உண்டாக நீர்போய், ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே” என்று நிந்தாஸ்துதியாகப் பாடியுள்ளார்.

மாறனாரின் மனைவியார் செயலும் அம்மையின் செயலும் தம்முள் ஒத்திருந்ததை உணர்ந்த சேக்கிழார் ‘ஏலவார் குழலாள் தன்னோடு’ என்று கோடிக் காட்டுகிறார்.

பெரியபுராணத்தில் அமங்கலமான சொற்களே கிடையாது.

முத்த நாதன் மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லுமிடத்து, ‘தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய’ என்பார்.

அதிசூரன் ஏனாதிநாத நாயனாரோடு போரிட்டு வஞ்சனையால் அவரைக் கொன்றபோது, ’முன்நின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான்’ என்பார்.

அப்பூதியடிகளின் மகன் மூத்த திருநாவுக்கரசு வாழையிலை அரியச் சென்றபோது அரவு தீண்டி உயிரிழக்கிறான். தம் வீட்டிற்கு எழுந்தருளிய அப்பரடிகளின் திருவமுதிற்குத் தடையாகுமே என்று கருதிய அப்பூதி தம்பதியினர் அவனை ஓர் பாயில் சுருட்டி மறைத்து வைத்து விடுகின்றனர். பின் அப்பரடிகள் திருவமுதுக்குத் தயாரானபோது மூத்த திருநாவுக்கரசு எங்கே எனக் கேட்க அவன் இறந்தான் என்று கூறாது,’ இப்போது இங்கு அவன் உதவான்’ என்றார் அப்பூதியடிகள் என்பார் சேக்கிழார்.

பின்பு அப்பரடிகளின் வற்புறுத்தலின் பேரில் அப்பூதியடிகள் தம் ‘மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார்’ என்பார்.

சேக்கிழார்க்கு சிக்கல் தந்த இடங்களும் உண்டு.

அடியார்களோடு சிவபிரான் பேசியதாக வரும் இடங்களில் எல்லாம் முன்னுணர்வோடு தான் வார்த்தைகளை அடுக்கியிருக்கிறார்.

தடுத்தாட்கொண்ட புராணத்தில் ஈசன் பேசியதாக சேக்கிழார் கூறுபவை அனைத்தும் இறைவனுக்குப் பொருந்தியதாகவே இருக்கக் காண்கிறோம்.

சுந்தரரின் கல்யாணத்தில் இறைவன் வயோதிகக் கோலம் கொண்டு தடுத்தாட்கொள்ள வருகின்றான். இருவரிடையே இருக்கும் வழக்கினை முடித்த பின்பு மணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி நாவலூரன் தம்மடிமை என்று கூறுகின்றான்.

இதைக் கேட்ட அனைவரும் அந்தணன் அந்தணனுக்கு அடிமையாவது உண்டோ என்று கூறிச் சிரித்தனர். சுந்தரர் “நன்றால் மறையோன் மொழி” என நக்கலாகச் சிரிக்கிறார்.

உடனே கிழவேதியருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது. சுந்தரரைப் பார்த்து “ இக்காரியத்தை இன்று நீ சிரித்தது என் ஏடா” என்கிறார்.

வேதியரின் கோபத்தைக் கண்ட சுந்தரர் சிரிப்பை நிறுத்திவிடுகிறார்,

“மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி,
நேசம்முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி”

என்கிறார் சேக்கிழார்.

பின்பு சுந்தரர் இறைவனை நோக்கி,

“ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்”

எனக் கடிந்து கொள்கிறார்.

உடனே வேதியர் “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக” என்கிறார்.

இந்த வார்த்தை அப்படியே இறைவனுக்குப் பொருந்துவதாக இருக்கிறது.

“என்னை யார் என்று உனக்குத் தெரியவில்லை.”
“நீ இன்று, எத்தனை சொன்னால் யாதும் மற்றவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை”

“பேச்சு தேவையில்லை. எனக்குப் பணி செய்யப் புறப்படு”
“ஆகில் நின்று, வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும்”
என்கிறார் சேக்கிழார்.

இதுதான் சைவர்களுக்கு சேக்கிழார் தரும் ‘மெசேஜ்’. “பேச்சினால் ஆவதென் பேதைகாள்” என்பார் ஞான சம்பந்தர். இன்று நம்மிடம் பேச்சுத்தான் அதிகம். செயலில் ஒன்றும் இல்லை.

இங்கு இறைவன் கூறுவதெல்லாம் அவன் இயல்புக்குப் பொருத்தமாகவே உள்ளதைக் காணலாம்.

சுந்தரர் ஓலையைக் கிழித்த பிறகு வேதியர் முறையிடுகிறார். பக்கத்திலுள்ளவர்கள் இருவரையும் விலக்கி வேதியரின் ஊர் எது என்று கேட்க, “ எனக்கு பக்கத்து ஊர்தான், வெண்ணெய் நல்லூர். அது கிடக்கட்டும். இவன் ஓலையை கிழித்ததிலிருந்தே எனக்கு அடிமை என்பதை நிரூபித்து விட்டான், பார்த்தீர்களா..!” என்று பிடி விடாமல் வாதிட்டார்.

சுந்தரர் இவரின் விடாப்பிடியைக் கண்டு “பழைய மன்றாடி போலும் இவன்” என்கிறார்.

இறைவன் உண்மையிலேயே பழைய மன்றாடிதானே...?

சித்தவடமடத்தில் சுந்தரர் படுத்திருந்தபோது இறைவன் வழக்கம் போல் கிழவேதியராக வந்து சுந்தரரின் தலைமீது தன் திருவடி படும்படி படுத்துக் கொள்கிறான். சுந்தரர் வேறு பக்கம் படுத்தபோதும் இறைவன் விடவில்லை. சுந்தரர் அவரை நோக்கி,
” அருமறையோய் உன்னடி என் சென்னியில் வைத்தனை” என்கிறார்.

வேதியரான சிவபிரான் “ திசையறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்” என்கிறார்.

மணிவாசகர் “பழையோன் காண்க” என்பார்.

திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்ததைக் கூறும் போது, “தாவில் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்” என்பார் சேக்கிழார்.

ஞான சம்பந்தர் இந்த உலகம் முழுதையும் சிவமாகவே கண்டவர். அப்பரடிகள் “எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி”
என்பார்.

இந்த உலகம் உயிர் உள்ளவை, உயிரற்றவை என இரு கூறாக உள்ளது.

உயிரற்றவையில் ஆற்றல் எனும் சக்தி உள்ளது. அச்சக்தியை அவற்றிடமிருந்து பிரிக்க முடியாது. குணத்தை குணியிடமிருந்து பிரிக்க முடியுமா? அப்படிப் பிரித்தால் குணி அழிந்து விடும்.

இதைத்தான் இலிங்க வடிவம் உணர்த்துவதாக சித்தியார்,
சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும் உணர் குணகுணியும் ஆகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்

என்று தெளிவாக எடுத்துரைக்கின்றது.

ஆக, சராசரங்கள் எல்லாம் சிவவடிவம். சம்பந்தர் வாழ்வில் நடந்த ஆண்பனை பெண்பனையாதல், எலும்பு பெண்ணாதல், ஏடு ஆற்றில் எதிர் செல்லல், நெருப்பில் ஏடு வேகாதிருத்தல் இவற்றையும் சேக்கிழார் வாக்கையும் ஒப்பு நோக்கினால் உண்மை விளங்கும்.

சம்பந்தரின் வாழ்வியலை நன்கு உள்வாங்கியதால் தான் சேக்கிழாரால் “தாவில் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார்” என்று கூற முடிந்தது.

இடுகையிட்டது SIVAM நேரம் 9:14 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2020 (2)
    • ▼  ஏப்ரல் (2)
      • முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்
      • சைவ சமயம் அடிப்படை நுட்பம்
  • ►  2014 (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2013 (1)
    • ►  நவம்பர் (1)
  • ►  2011 (18)
    • ►  நவம்பர் (7)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  மே (2)
    • ►  ஜனவரி (4)

என்னைப் பற்றி

SIVAM
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

பிரபலமான இடுகைகள்

  • சைவ சித்தாந்தம்
    சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சி...
  • திருமணம் நடக்க
    நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம் ...
  • பெரியபுராணம் – சில சிந்தனைகள்
    சை வத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கம...
  • பைரவ தீபப் பொடியின் செய்முறை
     போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டி...
  • ஸ்ரீ பைரவர்
    குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம்...
  • பயம் போக்கும் பைரவர்
    பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால்,...
  • நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
    நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை? 1) பத்மம் 2) மஹாபத்மம் 3) மகரம் 4) கச்சபம் 5) குமுதம் ...
  • தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!
    உயிர்கள் இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன...
  • திருவைந்தெழுத்து
    சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனை...
  • ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை
    ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!! ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான ஸத்குரு  சரணம் சரணம்  காப்பு   ஆக்கும் தொழில...

பிரபலமான இடுகைகள்

  • சைவ சித்தாந்தம்
    சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சி...
  • திருமணம் நடக்க
    நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம் ...
  • பெரியபுராணம் – சில சிந்தனைகள்
    சை வத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கம...
  • பைரவ தீபப் பொடியின் செய்முறை
     போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டி...
  • ஸ்ரீ பைரவர்
    குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம்...
  • பயம் போக்கும் பைரவர்
    பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால்,...
  • நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
    நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை? 1) பத்மம் 2) மஹாபத்மம் 3) மகரம் 4) கச்சபம் 5) குமுதம் ...
  • தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!
    உயிர்கள் இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன...
  • திருவைந்தெழுத்து
    சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனை...
  • ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை
    ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!! ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான ஸத்குரு  சரணம் சரணம்  காப்பு   ஆக்கும் தொழில...

பக்கங்கள்

  • முகப்பு

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • சைவ சித்தாந்தம்
    சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சி...
  • திருமணம் நடக்க
    நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம் ...
  • பெரியபுராணம் – சில சிந்தனைகள்
    சை வத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கம...
  • பைரவ தீபப் பொடியின் செய்முறை
     போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டி...
  • ஸ்ரீ பைரவர்
    குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம்...
  • பயம் போக்கும் பைரவர்
    பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால்,...
  • நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
    நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை? 1) பத்மம் 2) மஹாபத்மம் 3) மகரம் 4) கச்சபம் 5) குமுதம் ...
  • தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!
    உயிர்கள் இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன...
  • திருவைந்தெழுத்து
    சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனை...
  • ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை
    ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!! ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான ஸத்குரு  சரணம் சரணம்  காப்பு   ஆக்கும் தொழில...

பிரபலமான இடுகைகள்

  • சைவ சித்தாந்தம்
    சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சி...
  • திருமணம் நடக்க
    நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம் ...
  • பெரியபுராணம் – சில சிந்தனைகள்
    சை வத்தில் குரு,லிங்க,சங்கம வழிபாடு சிறப்பாகக் கூறப்படும். அதிலும் சங்கம வழிபாட்டிற்கு மிகச் சிறப்பு உண்டு. பட்டினத்தடிகள் ‘நல்லார் இணக்கம...
  • பைரவ தீபப் பொடியின் செய்முறை
     போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டி...
  • ஸ்ரீ பைரவர்
    குழந்தை பாக்கியம் தரும் பைரவர் வழிபாடு இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம்...
  • பயம் போக்கும் பைரவர்
    பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனியின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அதனால்,...
  • நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
    நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை? 1) பத்மம் 2) மஹாபத்மம் 3) மகரம் 4) கச்சபம் 5) குமுதம் ...
  • தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!
    உயிர்கள் இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும் பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன...
  • திருவைந்தெழுத்து
    சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனை...
  • ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை
    ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!! ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான ஸத்குரு  சரணம் சரணம்  காப்பு   ஆக்கும் தொழில...
எத்ரியல் தீம். Blogger இயக்குவது.